தண்டனையாக வழங்கப்பட்ட இடமாற்றம் இடைநிறுத்தம்

துஷ்பிரயோகம் தொடர்பில் முறையிட்ட யாழ் ஆசிரியர் ஒருவருக்கு தண்டிக்கும் வகையில் வழங்கப்பட்டிருந்த இடமாற்றத்தை இடைநிறுத்தி யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

எதிர்வரும் 2018ம் ஆண்டு ஜனவரி 10ம் திகதி வரை இவ்விடமாற்றம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த வருடம் பெரியபுலம் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மாணவர் துஷ்பிரயோகம் தொடர்பில் குறித்த ஆசிரியர் முறைப்பாடு செய்துள்ளார். இதற்கு தண்டனை வழங்கும் வகையில் குறித்த ஆசிரியருக்கு வட மாகாண கல்வியமைச்சு இடமாற்றம் வழங்கியிருந்தது.

இது தொடர்பில் வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது அவ்விடமாற்றம் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்விடயம் தொடர்பில் வட மாகாண கல்வியமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண கல்விப்பணிப்பாளர் ஆகியோருக்கும் இவ்விடமாற்றம் தொடர்பில் அறிவிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435