தனிப்பட்ட வாகனங்களில் பயணிகளை ஏற்றினால் அபராதம்

சட்ட விரோதமாக பயணிகளை ஏற்றிச் செல்ல முயலும் மோட்டார் வாகன சாரதிகள் மூவாயிரம் திர்ஹம் அபராதம் செலுத்த வேண்டியேற்படுவதுடன் 24 புள்ளிகளையும் இழந்து 30 நாட்களுக்கு வாகனமும் பறிமுதல் செய்யப்படும் என்று அபுதாபி பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

இந்த வருடம் ஆரம்பம் முதல் இன்று வரை அபுதாபி தலைநகரில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் அவ்வாறு சட்டவிரோதமாக ஏற்றிச் செல்லப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளமையையடுத்து இப்புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அபுதாபி பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சில மோட்டார் வாகன சாரதிகள் தமது வாகனங்களை பயணிகளை ஏற்றிச் செல்ல பயன்படுத்துகின்றனர். பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு அபுதாபி அரசாங்கம் வழங்கும் அனுமதி பத்திரமின்றி பயணிகளை ஏற்றிச் செல்வது சட்டவிரோதமான செயலாகும். அவ்வாறு தமது சொந்த வாகனங்களை பயன்படுத்தும் பலர் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருப்பவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. கடந்த 3 மாத காலத்தில் மட்டும் சுமார் 350 தனிப்பட்ட வாகனங்கள் பயணிகளை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு அவ்வாறு சட்டவிரோதமாக இயங்கிய 100 மோட்டார் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. எனவே இவ்விடயம் தொடர்பில் மிக அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸர் எச்சரித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435