வீஸா சட்டவிதிகளை மீறிய 180 பேர் நாடு கடத்தப்படுவர்

வீஸா சட்டவிதிகளை மீறிய 180 ​வௌிநாட்டவர்களை நாடு கடத்த குடிவரவு குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது.

பல்வேறு நோக்கங்களுக்காக இலங்கைக்கு வந்த அவ்வௌிநாட்டவர்கள் மீரிஹான முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று குடிவரவு குடியகல்வு திணைக்களம் நிர்வாக ஜெனரல் பசன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் பலர் வீஸா காலம் நிறைவடைந்து மூன்று மாதங்களுக்கும் மேலாக இலங்கையில் தங்கியுள்ளதாகவும், அவர்களில் இந்தியா, சீனாள, மற்றும் நைஜீரிய நபர்கள் உள்ளடங்குவதாகவும் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

வீஸா சட்டதிட்டங்களை மீறிய 6.700 பேர் நாட்டில் உள்ளனர் என்று தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் நாடு கடத்தப்படவுள்ளவர்கள் அல்ல. வீஸா நிறைவடைந்து ஓரிரு வாரங்கள் கடந்தவர்கள். தண்டப்பணத்தை செலுத்தி வீஸா காலத்தை நீடித்துகொண்டு பின்னர் நாட்டை விட்டு வௌியேுறுவார்கள். பல்வேறு காரணங்களினால் ஏற்பட்ட பிரச்சினைகளினால் வீஸா காலத்தை நீடிக்க முடியாதவர்கள் இதற்குள் உள்ளடங்குகின்றனர்.

இதுதவிர, மீரிஹான முகாமில் 180 இற்கும் அதிகமானவர்கள் உள்ளனர். அவர்கள் நாடு கடத்தப்படவேண்டியவர்கள். வீஸா சட்டதிட்டங்களை மீறியுள்ளனர். சுற்றுலா வீஸாவில் இலங்கை வந்து நாட்டில் தொழில் செய்தவர்களே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளனர். இலங்கைக்கு வந்து வீஸா சட்டவிதிகளை மீறுவோர் தொடர்பில் நாம் கவனமாக இருப்பதுடன் நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435