தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க பிரச்சினைகளை ஆராய விசேட குழு

தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து தீர்வு காண்பதற்கான விசேட குழுவொன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார்.

நாடு முழுவதும் நேற்று (2) வேலை நிறுத்தத்தில் ஈடுதபட்டிருந்த தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் உட்பட ஏனைய சங்கங்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதி இக்குழுவை நியமித்தார்.

போக்குவரத்து அமைச்சின் செயலாளர், நிதியமைச்சின் செயலாளர், போக்குவரத்து சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், பொலிஸ் மா அதிபரினால் நியமிக்கப்பட்ட சிரேஷ்ட அதிகாரியொருவர், மோட்டார் வாகன ஆணையாளரினால் நியமிக்க சிரேஷ்ட அதிகாரியொருவர் மற்றும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இக்குழுவில் உள்ளடங்குகின்றனர்.

எதிர்வரும் திங்கட் கிழமை (05) அகில இலங்கை பஸ் உரிமையாளர் சங்கத்தின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளதுடன் குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடவுள்ளனர்.

புதிய அபராதத் தொகை தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் மட்டுமன்றி, பஸ் உரிமையாளர் சங்கம் எதிர்நோக்கும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் இக்குழுவுடன் கலந்துரையாடி தீர்வுகளை பெற்றுக்கொள்ளலாம் என்று இதன் ​போது ஜனாதிபதி தெரிவித்தார்.

அரசாங்கம் எடுக்கும் அனைத்து தீர்மானங்களும் பொது மக்களின் நலன்கருதியே எடுக்கப்படுவதாக இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டின் அனைத்து துறைகள் தொடர்பில் பொறுப்புடன் நடந்துக்கொள்வது அரசாங்கத்தின் கொள்கை என்றும் இதனூடாக எவருக்கும் அநீதியிழைக்க அரசு இடமளிக்கப் போவதில்லை என்றும் கலந்துரையாடல்களினூடாக தீர்க்க தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன் போது மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரியவும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435