குளியாப்பிட்டி – கொழும்பு தனியார் பஸ் ஊழியர்கள் இன்று (25) காலை முதல் பணிப் புறக்கணிப்பை போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
பஸ் சாரதி மீது பொது மக்கள் தாக்குதல் நடத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தோ இப்பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த 23ம் திகதி மாரவில – தப்போவ பிரதேசத்தில், தனியார் பஸ்ஸொன்று முச்சக்கரவண்டியின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு பெண் பலியானதுடன் மூவர் காயமடைந்தனர். இதனால் கோபமடைந்த மக்கள் சாரதியை தாக்கியுள்ளனர். இத்தாக்குதலை கண்டிக்கும் வகையில் குளியாப்பிட்டி- கொழும்பு தனியார் பஸ் ஊழியர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.