தனியார் பஸ் ஊழியர் பணிப்பகிஷ்கரிப்பு திட்டம் கைவிடப்பட்டது!

தனியார் பஸ் ஊழியர்கள் சங்கம் முன்னெடுக்கவிருந்த பணிப்பகிஷ்கரிப்பு ​போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவுடனான கலந்துரையாடலின் பின்னர் இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

தமது தொழிலை முன்னெடுத்துச் செல்வதில் உள்ள சவால்கள் குறித்து அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டது. அவ்விடயங்களை எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதிக்கு சமர்ப்பிப்பதாக அமைச்சர் எமக்கு உறுதியளித்துள்ளார். தமது கோரிக்கைக்கு அரசாங்கம் எந்தளவுக்கு செவிமடுக்கிறது என்பது குறித்து அவதானித்த பின்னர் எதிர்கால நடவடிக்கையை முன்னெடுப்போம் என தனியார் பஸ் ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் கருத்து வௌியிட்ட அமைச்சர், தனியார் பஸ் ஊழியர் சங்கத்தின் கோரிக்கை நியாயமானது. எனினும் அவர்களின் பிரதான கோரிக்கையான பஸ் கட்டண திருத்தத்திற்கு இது பொருத்தமான காலமல்ல. கொரோனா பிரச்சினை காரணமாக நாட்டு மக்கள் பாரிய பொருளாதார பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளனர். தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்திருந்த நிவாரணம் சில நிதி நிறுவனங்களிடமிருந்து இதுவரை கிடைக்காதிருப்பது தொடர்பில் தாம் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அங்குனகொலபெலஸ்ஸவில் அமைந்துள்ள அமைச்சரின் வீட்டில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் 5 தனியார் பஸ் ஊழியர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்துகொணடிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம் – லங்காதீப

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435