தனியார் வைத்தியசாலைகளின் பி.சி.ஆர் கட்டணம் தொடர்பான முடிவு

பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கான கட்டணங்கள் மற்றும் அத்தகைய செலவுகளை ஒழுங்குபடுத்த வேண்டியதன் அவசியம் குறித்து தனியார் துறை வைத்தியசாலை மற்றும் ஆய்வக அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.

நேற்றுப் (25) பிற்பகல் நடைபெற்ற கொவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தில் இடம்பெற்ற சிறப்பு கலந்துரையாடல் இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

கொவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் வைத்திய நிபுணரும் பொது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமுமான வைத்தியர் அசேல குணவர்தன ஆகியோர் தலைமையில் நடைப்பெற்ற கலந்துரையாடலில், தனியார் துறையில் பி.சி.ஆர் சோதனைகள் மற்றும் மாறுபட்ட கட்டணங்கள் குறித்து பெரும்பாலும் கவனம் செலுத்தப்பட்டதாக இராணுவ இணையதளம் தெரிவித்துள்ளது.

நாடு சுகாதார நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் இவ்வேளையில் இரகசிய நடைமுறைகளை நாடாமல் பொதுவான நடைமுறைகளை செயல்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டது.

இணைத் தலைவர்கள் குறித்த பங்குபற்றாளர்களுடனான கலந்துரையாடலின் போது எழுந்த பிரச்சினைகளை கவனமாகக் செவிமடுத்து பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணம் செலுத்தும் அடிப்படையில் தனியார் மட்டத்தில் இத்தகைய சேவையைப் பெற யாராவது ஆர்வமாக இருந்தால்இ அத்தகைய சோதனைகளை ஒரு முதன்மை தேசியத் தேவையாக கருதி செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு’ள்ளது.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435