தபால் சேவை ஊழியர்களின் விடுமுறை இரத்து

தபால் சேவை ஊழியர்கள் அடையாள பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் அவர்களின் விடுமுறை மறு அறிவித்தல்வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவத்துள்ளார்.

தபால் சேவை ஊழியர்கள் நேற்று நள்ளிரவு முதல் 48 மணிநேர பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில், அவர்களின் விடுமுறை இரத்துச் செய்யப்படுவதாக தபால்மா அதிபர் நேற்று அறிவித்தார்.

முதன்மை தபால் நிலையங்களுக்குரிய கட்டிடங்களில் விருந்தகங்கள் அமைக்கபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தபால் திணைக்கள நிர்வாக பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும் எனத் தெரிவித்தும் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்வதாக ஒன்றிணைந்த தபால் சேவை ஊழியர்கள் தொழிற்சங்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435