கல்வி, சுகாதாரம் மற்றும் ரயில் திணைக்களங்கள் இணைந்த சேவையாக மாற்றுவதற்கான யோசனையில் தபால் திணைக்களத்தையும் உள்வாங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
6 – 2000 வேதன சுற்றறிக்கை மூலமாக தபால் திணைக்கள பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு மற்றும் வேதன பிரச்சினை காரணமாக 21 ஆயிரத்துக்கும் அதிகமான தபால் திணைக்கள பணியாளர்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில், தபால் திணைக்களத்தையும் இணைந்த சேவையாக மாற்ற வேண்டும் என அந்த சங்கத்தின் இணைப்பாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.