தபால் தொழிற்சங்கங்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப் புறக்கணிப்பு

இன்று நள்ளிரவு முதல் 48 மணிநேர அடையாள பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தபால் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

பிரதான தபால் அலுவலகங்கள் உள்ள பகுதிகளில் ஹோட்டலகளை நிர்மாணிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இன்று (12) நள்ளிரவு முதல் எதிரவரும் 14 ஆம் திகதிவரை 48 மணித்தியாலங்களுக்கு இந்த அடையாள பணிப் புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

தபால் சேவைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இந்த நடவடிக்கையை நிறுத்துமாறும், தபால் சேவை பணியாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணுமாறும் வலியுறுத்தி இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தமது அடையாள பணிப் புறக்கணிப்பை கருத்திற்கொண்டு, பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அரசாங்கம் உரிய நடவடிக்கை எக்காவிட்டால், எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் தொடர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க உள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435