தமிழ் பட்டதாரிகள் ஏன் புறக்கணிக்கப்படுகிறார்கள்?

அரச நியமனங்கள் வழங்குவதில் தமிழ் பட்டதாரிகள் ஏன் புறக்கணிக்கப்படுகின்றனர் என்று யாழ் வணிகர் கழகம் கேள்வியெழுப்பியுள்ளது.

யாழ் வணிகர் கழகத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரின் கையொப்பத்துடன் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள வடக்கு பட்டதாரிகளுக்கு ஆதரவாக வௌியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வட மாகாண பட்டதாரிகளின் தொடர்ச்சியான போராட்டத்தை அரசாங்கம் கண்டுகொள்ளாதுள்ளது. வட மாகாணத்தில் உள்ள அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் உள்ள வெற்றிடங்களுக்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளை விரைவில் நியமிக்க அரசாங்கம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வேலையில்லா வட மாகாண பட்டதாரிகளுக்கு வெகு விரைவில் தொழில் வாய்ப்பினை வழங்குவது அவசியம். அவர்களுக்கான ஆதரவை யாழ் வணிகர் கழகம் என்றும் வழங்கும். பல்வேறு துன்பங்கள், போர் சூழலுக்கு மத்தியில் கனவுகளுடன் தமது பட்டப்படிப்பை எமது பட்டதாரிகள் பூர்த்தி செய்துள்ளனர். பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் பல்கலைக்கழக படிப்பை பூர்த்தி செய்து இன்று தமது கனவு நிறைவேறாது பாரிய மன உலைச்சலுடன் இருக்கும் எம் பட்டதாரிகளுக்கு குறிப்பிட்ட அளவே வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

அதிலும் ஆசிரியர்துறை மற்றும் மாவட்டச் செயலகங்களில் தான் அதிகமான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. மத்திய அமைச்சுக்கள், அமைச்சுக்கள் சார் திணைக்களங்களில் வேலைவாய்ப்புகள் காணப்பட்ட போதிலும் எமது பட்டதாரிகளுக்கு வழங்கப்படுவதில்லை. இது மிகவும் கவலைக்குரிய விடயம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435