கடந்த 2015ம் ஆண்டு நடத்தப்பட்ட அதிபர் சேவை iii இற்கான போட்டிப்பரீட்சையில் தெரிவாகியவர்களில் அதிக புள்ளிகளை பெற்ற 30 பேர் அடங்கிய குழுவுக்கு ஒரு வாரகால வௌிநாட்டு பயிற்சியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் வழங்கிய ஆலோசனைக்கமைய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கல்வித்துறை மேம்பாட்டுக்கு பாடசாலை தொகுதி தரமாக அபிவிருத்தி செய்யப்படுவது மிகவும் அவசியம். இவ்வாறு வழங்கப்படும் பயிற்சிகளினூடாக பெறப்படும் அறிவு மற்றும் அனுபவத்தை தமது தொழில் அபிவிருத்திக்காக அதிபர்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தினூடாக புதிதாக தெரிவு செய்யப்பட்ட 196 அதிபர்கள் வௌிநாட்டு பயிற்சிக்காக அனுப்பப்படவுள்ளனர். அது தவிர நவம்பர் மாதம் 15ம் திகதி 30 பேர் கொண்ட குழு வௌிநாடு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.