வட மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் நிலவும் தமிழ், வரலாறு. தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடங்களுக்கான 349 வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் விரைவில் கோரப்படவுள்ளது என்று வட மாகாண அமைச்சின் செயலாளர் இ. இரவீந்தரன் தெரிவித்துள்ளார்.
மேற்படி பாடங்களுக்கு நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஆயிரம் பேரை நியமிக்க அனுமதிக்குமாறு அரசிடம் கோரப்பட்டது. அதற்கான அனுமதி கிடைத்ததையடுத்ததையடுத்து விண்ணப்பங்கள் கோரப்பட்டன. அதனையடுத்து விண்ணப்பத்திவர்களுக்கான போட்டிப்பரீட்சை நடத்தப்பட்டு பொது அறிவு, உளச்சார்பு என்பவற்றுக்கு தலா 80 புள்ளிகள் வீதம் பெற்றவர்களுக்கான நேர்முகத்தேர்வுக்கு 841 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில் 641 பேர் மட்டுமே தகுதி பெற்றனர். இவர்களுக்கான நியமனங்கள் கடந்த மார்ச் மாதம் வழங்கப்பட்டது.
எஞ்சிய வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதி பெறப்பட்டமையினால் மீண்டும் விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன. பட்டதாரிகளிடமிருந்தே விண்ணப்பங்களை எதிர்பார்க்கிறோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.