தம்புள்ளை மைதான பணியார்கள் உண்ணாவிரத போராட்டம்

தம்புள்ளை சர்வதேச கிரிக்கட் மைதான பணியாளர்கள் நேற்று (07) ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று (08) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 11 பணியாளர்களால் இந்தப் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

10 வருடங்களாக தாம் பணியாற்றுகின்றபோதும், தமது சேவையை நிரந்தரமானதாக்க இலங்கை கிரிக்கட் நிறுவனம் முன்ரவவில்லை என சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், மைதானத்தின் பார்வையாளர்கள் அரங்கின் கூறையின் மீதேறி உண்ணாவிரதப் போராட்டத்தை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

தாம் முன்வைத்துள்ள கோரிக்கை தொடர்பில் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றை வழங்க சமம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேற்று வரை முன்வரவில்லை. என்றும் இதன் காரணமாக தமது உண்ணாவிரதப் போராட்டத்தை இன்றும் முன்னெடுப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435