தற்காலிகமாக நிறுத்தப்பட்ட வைத்திய அதிகாரிகள் சங்க வேலைநிறுத்தம்!

தமது பிள்ளைகளுக்கு பிரபல பாடசாலைகளில் இடமளிக்குமாறு கோரி மேற்கொள்ளவிருந்த ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக நிறுத்த தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்ததையில் தமது கோரிக்கைக்கு தீர்வு பெற்றுதருவதாக உறுதியளித்துள்ளமையினால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நலிந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

தமது பிள்ளைகளுக்கு பிரபல பாடசாலைகளில் அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி நாட்டின் பல மாவட்டங்களில் மருத்துவர்கள் 4 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கினர். அத்தோடு சங்கத் தலைவர், செயலாளர் உட்பட பல மருத்துவர்கள் பத்தரமுல்லையிலுள்ள கல்வியமைச்சில் அத்துமீறி நுழைந்தனர். நீதிமன்ற உத்தரவையடுத்தே வௌியேறினர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை (15) சுகாதார அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் கல்வியமைச்சருடன் கலந்துரையாடி தமது கோரிக்கைக்கு தீர்வு பெற்றுத்தருவதாக அமைச்சர் உறுதியளித்ததாகவும் இதனால் வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக கைவிடுவதாகவும் வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் கல்வியமைச்சர் கருத்து தெரிவிக்கையில் மருத்துவர்களின் இத்தகைய செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.

இதேவேளை, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தேவையற்ற வகையில் கல்விச் சேவையில் மூக்கை நுழைப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435