
எஜமானுக்கு எதிராக வழக்கு தொடுத்து 500,000 டினார் பணிக்கொடை மற்றும் ஏனைய சலுகைகள் கோரிய ஹோட்டல் ஊழியருக்கு 40,000 டினார் நிதியை மட்டும் வழங்குமாறு அபுதாபி மனித வள அமைச்சின் கீழியங்கும் தொழிலாளர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஹோட்டலில் பரிமாறுபவராக பணியாற்றிய குறித்த நபர் வேலையிலிருந்து திடீரென நிறுத்தப்பட்டதையடுத்து நண்பர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் நட்டஈடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதன்போது அந்நபர் 16 வருடங்களாக பணியாற்றும் குறித்த ஹோட்டலில் தான் வெள்ளிக்கிழமைகள் உட்பட மேலதிக நேர பணிகளில் ஈடுபட்டதாக தொழிலாளர் நீதிமன்றில் தெரிவித்த போதிலும் அதற்குரிய ஆதாரங்களை வழங்கத் தவறியுள்ளார்.
எனினும் உடன் பணியாளர்கள் வேலை நேரம் முடிந்து சென்ற பின்னரும் கூட மேலதிக நேரங்களில் தனது சுயவிருப்பத்திற்கிணங்கவே ஹோட்டலில் தங்கியிருப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.
சட்டரீதியற்ற குறித்த நபரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் அவருக்கு தண்டனை வழங்காது 40,000 டினார் வழங்குமாறு ஹோட்டல் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு தமது எஜமானுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் ஊழியர்கள் உரிய சட்ட ஆலோசனையை பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும் தகுதியற்ற நண்பர்களின் வார்த்களை நம்பி பிரச்சினையில் சிக்கிக்கொள்ள கூடாது என்றும் அமைச்சு வட்டாரம் சுட்டிக்காட்டியுள்ளது.
வேலைத்தளம்