காத்தான்குடி நகரசபையில் பணியில் ஈடுபட்டிருந்த தற்காலிய ஊழியர்கள் 49 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என காத்தான்குடி நகரசபை செயலாளர் எஸ்.எம். பி ஸபி தெரிவித்துள்ளார்.
மூன்று கட்டங்களாக காத்தான்குடி நகரசபை பணிகளுக்கு தற்காலிமாக இணைக்கப்பட்ட ஊழியர்களே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
முதலாம் கட்டமாக 18 பேரும் இரண்டாம் கட்டமாக 24 பேரும் மூன்றாம் கட்டமாக 7 பேருமாக மொத்தமாக 49 பேர் இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
உள்ளூராட்சி சபையின் அனுமதியின்றி அரசியல் செல்வாக்குடன் மாகாணசபையில் இவர்கள் பணியாற்றி வந்தனர் என்றும் உள்ளூராட்சி மாகாணசபைகள் மற்றும் அத்திணைக்களத்தில் பதிவு செய்யப்படாத காரணத்தினால் இவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் நகரசபை தலைவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வூழியர்கள் கடந்த 2015 ஜூலை 2ம் திகதி தொடக்கம் பணியாற்றி வந்த நிலையில் 2017ம் ஆண்டு ஏப்ரல் 13ம் திகதி அமுலுக்கு வரும் வரையில் குறித்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணசபை நிதியில் இருந்து 150 இலட்சம் இவ்வூழியர்களுக்காக செலவிடப்பட்டுள்ளதாகவும் குறித்த விபரங்கள் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
தினகரன்