தாதியர் சங்கம் – ஜனாதிபதி சந்திப்பு

அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய உட்பட பிரதிநிதிகள் நேற்றுமுன்தினம் (10) மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடினர்.

புதிய தாதியர் பட்டப்படிப்பு பீடமொன்றை நிறுவுதல், பொதுச் சுகாதாரத் துறையில் காணப்படும் தாதியர் வெற்றிடங்கள் மற்றும் அவ்வெற்றிடங்களுக்கு தாதியர்களை இணைத்துக் கொள்ளல் தொடர்பில் இக்கலந்துரையாடலில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

கொழுப்புப் பல்கலைக்கழகத்துடன் இணைந்ததாக தாதியர் பட்டப்படிப்பு பீடமொன்றை உருவாக்குதல் தொடர்பாக ஏற்கனவே முன்மொழியப்பட்டிருப்பதுடன் அதற்காக 2016 ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் 2500 மில்லியன் ரூபாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் சுகாதாரம், போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபால ஆகியோர் கலந்து கொண்டனர்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435