திடீர் பணிப்பகிஷ்கரிப்பில் மருத்துவசேவை உத்தியோகத்தர்கள்

நாளை (30) திடீர் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளதாக துணை மருத்துவசேவை உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியதுறை அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சுகாதார, ​போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியதுறை அமைச்சருடன் கடந்த 2015ம் ஆண்டு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை இணக்கப்பாடுகளுக்கமைய கோரிக்கைகள் பலவற்றை நிறைவேற்றுவதில் பல்வேறு மனக்கசப்புகளும் தாமதங்களும் ஏற்பட்டுள்ளன. மிக கஷ்டப்பட்டு இணக்கத்தை பெற்றுக்கொண்ட பல கோரிக்கைகள் நிர்வாக ரீதியாக தாமதமாவதும் நிர்வாக ரீதியாக தீர்த்துக்கொள்ளப்படவேண்டிய விடயங்களை தொழிற்சங்க பிரச்சினையாக உருவாக்கி அவற்றுக்கு தீர்வு கிடைக்காமல் செய்வதும் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. எனவே 30.10. 2019 அன்று காலை 8.00 மணிக்கு அவசர பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுக்க இணைச்சபை தீர்மானித்துள்ளது.

இவ்வேலைநிறுத்தப்போராட்டத்தில் துணை மருத்துவசேவையுடன் இணைந்த 6 தொழிற்சங்கங்கள் மற்றும் இணை வைத்திய சேவையுடன் தொடர்புபட்ட 15 தொழிற்சங்கங்களும் நாடு தழுவிய பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இப்பணிப்பகிஷ்கரிப்பு போராட்டக் காலத்தில் உயிர் பாதுகாப்புசேவையை வழங்க தீர்மானித்துள்ள போதிலும் அநாவசிய அழுத்தங்கள் இல்லாதிருந்தால் மட்டும் சுய விருப்பத்துடன் அதிகாரிகள் அச்சேவையை வழங்குவர்.

இப்பணிப்பகிஷ்கரிப்பு போராட்டமானது மகப்பேற்று மருத்துவமனைகள், சிறுவர் மற்றும் புற்றுநோய் மருத்துவமனைகளில் முன்னெடுக்கப்படாது. குறித்த பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடலில் தீர்வை பெற இன்னும் எதிர்பார்த்துள்ளோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435