திவிநெகும திணைக்களத்தைச் சேர்ந்த 8100 ஊழியர்களுக்கு 12 வீத ஊழியர் சேமலாப நிதியை வழங்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் லஷ்மன் யாப்பா அபேவர்தன இவ்விடயத்தை தெரிவித்தார்.
நிதியமைச்சில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு நேற்று (25) பாராளுமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட விசேட கலந்துரையாடலின் பின்னர் இத்தீர்மானம் எட்டப்பட்டது.
இதற்கமைய கடந்த 1995ஆம் ஆண்டு சமுர்த்தி அதிகாரிகளாக உள்வாங்கப்பட்டு பின்னர் திவிநெகும திணைக்களத்தில் இணைக்கப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் சேவைகாலத்தில் இணைந்த காலம் முதலான ஊழியர் சேம லாப நிதி வழங்கப்படவுள்ளது.
எமது எந்த முயற்சியை முறியடிக்க பல தொழிற்சங்கங்கள் முயன்றபோதிலும் அதனை வெற்றிகொண்டு இன்று திவிநெகும ஊழியர்களுக்கு நன்மைப்பயக்கும் விடயத்தை நாம் மேற்கொண்டுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.