தீக்குச்சி உற்பத்தியாளர்கள் போராட்டம்

தீக்குச்சி உற்பத்திக்கான மூலப்பொருட்கள் இல்லாதுள்ளமையால் 5 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, கண்டியில் தீக்குச்சி உற்பத்தியாளர்கள் நேற்று எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

11 தீக்குச்சி உற்பத்தி நிறுவனங்களின் ஆயிரக்கணக்கானோர் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

வெடிமருந்து தட்டுப்பாடு காரணமாக தீக்குச்சி உற்பத்தி முற்றுமுழுதாக தடைப்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.

தீக்குச்சி உற்பத்தி நிறுவனங்களில் கடந்த 3 மாதங்களாக வெடிமருந்து இல்லை.

கடந்த ஏப்ரல் மாதம் இதற்கான விண்ணப்பம் செய்யப்பட்டிருந்த போதும், தற்போதுவரையில் மூலப்பொருட்கள் கிடைக்கவில்லை என தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், அரசாங்கத்திடம் தாம் வெடிமருந்துகளைக் கோருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

யட்டிநுவர வீதியில் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டதினால் கண்டி நகர் முழுவதிலும் பாரிய நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீக்குச்சி உற்பத்திக்கு அவசியமான மூலப்பொருட்களை இரண்டு வாரங்களுக்குள் உற்பத்தியாளர்களுக்கு பெற்றுக்கொடுப்பதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் டீ.ஆர்.எல்.ரணவீர, போராட்டத்தில் ஈடுபட்ட தரப்பினரிடன் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

இதையடுத்து, கண்டியில் நேற்று முன்னெடுத்த போராட்டத்தைக் தீக்குச்சி உற்பத்தியாளர்கள் மற்றும் பணியாளர்கள் கைவிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435