எல்பிட்டிய- குருந்துகஹதென்ன தபால் நிலைய உப அதிபர் மரணம் தொடர்பில் பாராபட்சமற்ற விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என்று தபால் ஊழியர்கள் சங்கங்களின் முன்னியின் சம அழைப்பாளர் எச்.கே.காரியவசம் தெரிவித்துள்ளார்.
குறித்த உப தபால் அதிபர் தற்கொலை செய்துக்கொண்டார் என்று பல்வேறு ஊகங்கள் வெளியிடப்பட்டாலும் தற்கொலை செய்துக்கொள்வதற்கான காரணங்கள் இருக்கவில்லை என்றும் பல தடவைகள் சிறந்த அதிபராக தெரிவு செய்யப்பட்ட திறமையான பெண் என்றும் அழைப்பாளர் தெரிவித்துள்ளார்.
அதனால் இம்மரணம் தொடர்பில் சந்தேசம் நிலவுவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், உரிய விசாரணைகள் நியாயமான முறையில் நடைபெற வேண்டும் என்றும் தொழிற்சங்கம் என்றரீதியில் இது தொடர்பில் தாம் அவதானத்துடன் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
நேற்றுகாலை (29) அல்பிட்டிய – குருந்துகஹதென்ன உப தபால் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அங்கு பணியாற்றிய 49 வயதான தபால் நிலைய உப அதிபர் கடுமையான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பயனளிக்காமல் உயிரிழந்ததுடன் அவருடைய உடற்பாகங்களில் நச்சுத்தன்மை அடங்கியுள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.