தீராத மாலபே மருத்துவக்கல்லூரி பிரச்சினை

மாலபே மருத்துவக்கல்லூரியை பகுதியளவு அரச கல்லூரியாக மாற்ற எடுக்க தீர்மானத்திற்கு அரசாங்க மருத்துவ சங்கங்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பில் நேரடியாக ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளன.

உயர்கல்வி அமைச்சர் மற்றும் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு தலைமையில் 7 பல்கலைக்கழக பீடாதிபதிகளுடன் நேற்றுமுன்தினம் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடத்தப்பட்ட சந்திப்பொன்றில் மாலபே மருத்துவக்கல்லூரியை பகுதியளவு அரசுடமையாக்குவது தொடர்பில் ஆராயப்பட்டது. எனினும் இத்தகைய முயற்சிகளுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்பதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மாலபே மருத்துவக்கல்லூரி முழுமையாக அரசுடமையாக்கப்படுவதுடன் அதன் அனைத்துக் கட்டுப்பாடும் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரப்படவேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ள சங்கத்தின் பிரதிச் செயலாளர், அரசாங்கம் பகுதியளவு கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை தாம் கடுமையாக எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

நேற்றுமுன்தினம் நடத்தப்பட்ட சந்திப்பில் எந்தவித தீர்மானமும் எட்டப்படவில்லை. ஜனாதிபதியையும் சுகாதார அமைச்சரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளோம். இச்சந்திப்பில் சுமூகமான தீர்வு எட்டப்படும் என்ற தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்த பிரதிச் செயலாளர் எவ்வாறிருப்பினும் தனியார் மருத்துவக்கல்லூரியை பகுதியளவு அரசுடமையாக்குவதை ஏற்றுக்கொள்ள சங்கம் தயாரில்லை என்றும் தெரிவித்தார்.

வேலைத்தளம்/ நன்றி-  தினகரன்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435