தீர்க்கமான முடிவுடன் மட்டு பட்டதாரிகளை சந்திப்பேன் – முதலமைச்சர்

மத்திய அரசாங்கம் வழங்கும் தீர்வுடன் மட்டக்களப்பில் சத்தியாக்கிரகம் மேற்கொள்ளும் பட்டதாரிகளை சந்திக்கவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

காத்தான்குடி நகரசபை நூலக கேட்போர்கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பியே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இன்றுடன் 13வது நாளாக நிரந்த தொழில் வேண்டி மட்டக்களப்பு பட்டதாரிகள் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்பட்டதாரிகளுக்கு கிழக்கு மாகாணத்திலேயே நியமனங்களைப் பெற்றுக்கொடுக்க மாகாண அமைச்சர்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இது இன்று தோன்றிய பிரச்சினையல்ல. நாம் கிழக்கு மாகாணசபையில் ஆட்சிக்கு வரமுதலிருந்த இப்பிரச்சினை காணப்படுகிறது. தற்போது நாம் ஆட்சியில் உள்ளமையினால் அப்பிரச்சினை எம்மீது சுமத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசாங்கத்திற்கு இப்பிரச்சினை தொடர்பில் அழுத்தம் கொடுத்த போதிலும் பிரச்சினையை தீர்ப்பதற்கான அனுமதியை மத்திய அரசாங்கம் இன்னும் வழங்கவில்லை. அதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்கிறோம். பட்டதாரிகளின் சத்தியாக்கிரகமும் அதற்கு உந்துசக்தியாக உள்ளது.

இப்பிரச்சினை தொடர்பில் பிரதமரிடம் உரையாடியபோது இந்த வாரம் உயர் மட்ட கூட்டமொன்றை நடத்துமாறு தேசிய கொள்கை திட்டமிடல் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். அதற்கான திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அக்கூட்டத்தில் பட்டதாரிகளின் நியமனமங்கள் எப்படி எவ்வாறு வழங்குவது என்பது தொடர்பில் தீர்க்கமான முடிவு எட்டப்படும். அத்தீர்வுடன் மட்டு தொழிலற்ற பட்டதாரிகளை நான் சந்திப்பேன் என்று முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435