பொது சுகாதார அதிகாரிகள் உட்பட துணை வைத்திய சேவையில் ஈடுபடும் 8 தரங்களைச் சேர்ந்த ஊழியர்கள் 48 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பை இன்று (16) ஆரம்பிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
மருந்தக ஊழியர்களை துணை மருத்துவ சேவைக்குள் உள்வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இப்பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படுவதாக துணை வைத்தியசேவை ஊழியர்கள் சங்கத்தின் ஊடகச் செயலாளர் நஜித் சுமனசேன தெரிவித்துள்ளார்.
இதனால், மலேரியா தடுப்புத் திட்டம், யானைக்கால் நோய் தடுப்புத் திட்டம், இலங்கை கண் மருத்துவமனை, இருதய சிகிச்சை பிரிவு, பாடசாலை பல் சுகாதார சிகிச்சை பிரிவு மற்றும் புற்றுநோய்க்கான தரவு தொழில்நுட்ப செயற்பிரிவு என்பவற்றின் பணிகளுக்கு தடையேற்படக்கூடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.