மலையக ஆசிரியர் உதவியாளர்களின் வேதன பிரச்சினை தீருமா?

மலையகத்தில் உள்ள 3 ஆயிரத்து 24 ஆசிரியர் உதவியாளர்களின் வேதன அதிகரிப்பு விடயத்தில் மத்திய அரசாங்கம், கல்வி அமைச்சு மற்றும் மாகாண சபை என்பன மாறிமாறி கருத்துக்களை வெளியிடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மலையகத்தில் 3024 பேருக்கு கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி ஆசிரியர் உதவியாளர்களாக நியமனம் வழங்கப்பட்டது.

நியமனம் வழங்கப்பட்ட காலத்தில் அவர்களுக்கு 6000 ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இரண்டு வருட பயிற்சிக்காக மட்டக்களப்பு உட்பட நாடு முழுவதும் உள்ள ஏனைய ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில், ஆயிரத்து 600 ஆசிரியர் உதவியாளர்கள் ஆசிரியர் பயிற்சிக்காக இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

இதன் ோது, அவர்களுக்கு 2017ம் ஆண்டு முதல் பத்தாயிரம் ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகிறது.

எனினும், அதன் பின்னர்

இவ்வாறு ஆசிரியர் உதவியாளர்களாக பணியாற்றுபவர்களில் பலர் பெண்கள். அவர்களுக்கு குழந்தைகளும் உள்ளன. தற்போதைய வாழ்க்கைச் செலவு நிலைமைகளுக்கு மத்தியில் இந்த பத்தாயிரம் ரூபா கொடுப்பனவில் அவர்கள் எவ்வாறு தங்களதுவாழ்வாதாரத்தை கொண்டு எடுத்துச் செல்வார்கள்?

இவர்களின் மாதாந்த கொடுப்பனவை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்தால் மத்திய அரசாங்கமும் மாகாண சபையும் மாறிமாறி கருத்துக்களை வெளியிடுகின்றன.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன்
கோரிக்கை விடுத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435