துறைமுகப் பணியாளர் பணிப்பகிஷ்கரிப்பு நிறுத்தம்

கொழும்பு துறைமுக ஊழியர்கள் ஆரம்பித்திருந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் நேற்று (03) நிறைவடைந்தது.

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுடனான கலந்துரையாடலின் பின்னர் இப்பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் கைவிடப்பட்டது என்று கொழும்பு துறைமுக வர்த்தக கைத்தொழில்கள் மற்றும் சேவைகள் முற்போக்கு தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் பொருத்துவதற்காக சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 3 பழுதூக்கிகளையும், அங்கு உடனடியாக பொறுத்துமாறு கோரி கொழும்பு துறைமுகத்தின் தொழிற்சங்கத் தலைவர்கள் மூவர் நேற்றுமுன்தினம் 187 அடி உயரமான பழுதூக்கி மீதேறி போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக நேற்று ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்த நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுடனான கலந்துரையாடலின் பின்னர் இப்போராட்டம் கைவிடப்பட்டது.

இதன்போது குறித்த பழுதூக்கிகளை தற்போதுள்ள இடத்தில் இருந்து அகற்றப்பட்ட கிழக்கு முனையத்தில் நிறுவுவதற்கான அனுமதியை பெற்றுத் தருவதாக உறுதியளித்த பிரதமர் அதற்காக முன்மொழிவையும் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதாக உறுதியளித்ததன் பின்னர் தமது போராட்டம் கைவிடப்பட்டதாக கொழும்பு துறைமுக வர்த்தக கைத்தொழில்கள் மற்றும் சேவைகள் முற்போக்கு தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஷியாமல் சுமணரத்ன தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435