
தமது தொழில் மற்றும் நிலைத் தன்மையை பாதுகாப்பதற்கு மீண்டும் தென்கொரியா செல்ல சந்தர்ப்பத்தை வழங்குமாறு தென்கொரியாவில் புலம்பெயர் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கொரியா லங்க சகோதர அமைப்பு தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி பிரதேசத்தில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் குறித்த அமைப்பு இதனை தெரிவித்துள்ளது.
தொழிலுக்காக கிடைத்த வீஸாவினை பயன்படுத்தி தென்கொரியாவில் பணியாற்றும் குறித்த புலம்பெயர் சேவையாளர்கள் தாம் இவ்வருட விடுமுறைக்காக இலங்கை வந்ததாகவும், தற்போதைய கொவிட் 19 தொற்று காரணமாக தமக்கு மீண்டும் தென்கொரியா செல்ல முடியாமல் போயுள்ளதாகவும் அதனால் தாம் மீண்டும் தென் கொரியா செல்ல வாய்ப்பை ஏற்படுத்தி தர ஜனாதிபதி தலைமையிலான அரச நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வூடக சந்திப்பில் கருத்து வௌியிட்ட குறித்த அமைப்பின் அழைப்பாளர் ரொஷான் விக்கிரமநாயக்க, “நாம் தென் கொரியாவில் பணியாற்றும் இலங்கையர்கள். நாம் விடுமுறைக்காக இலங்கை வந்தோம். தற்போதைய நிலைமையின் காரணமாக நாடுகளுக்கிடையிலான விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளமையினால் மீண்டும் தென் கொரியா செல்ல முடியாமல் போயுள்ளது. இதனால் நாம் தொழிலை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். பொதுவாக எமக்கு 30 நாள் விடுமுறைதான் வழங்கப்படும். தற்போது விடுமுறை அதிகரித்துக்கொண்டு செல்கிறது.
நாம் மூன்று வருட கால ஒப்பந்தத்தில் தென்கொரியாவில் பணியாற்ற அனுமதி பெற்றுள்ளோம். மூன்று வருடங்கள் நிறைவடையும் நிலையில் நான்காவது வருடத்திற்கான வீஸாவை பெற நாம் பணியாற்றும் நிறுவன பிரதானியின் அனுமதி மற்றும் விருப்பத்திற்கமைய நடைபெறும் செயலாகும். எமது மூன்று வருடம் பூர்த்தியடையவுள்ள நிலையில் நாம் பணியாற்றும் இடங்களில் சமூகமளிக்க வேண்டியது அவசியம். அப்படியில்லா விட்டால் நாம் மீண்டும் தென் கொரியாவில் பணியாற்ற வீஸா பெற முடியாது என்று தெரிவித்தார்.
மூலம் – லங்காதீப/ வேலைத்தளம்