எதிர்வரும் 2017ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையினால் வழங்கப்படும் அனைத்து கற்கைநெறிகளுக்கும் கட்டணம் அறவிடப்படமாட்டாது என்று தொழிற்கல்வி பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய NAITA, சமுத்திர பல்கலைக்கழகம் போன்ற தொழிற்கல்வி அதிகாரசபையின் கீழியங்களும் நிறுவனங்களில் கட்டணம் அறிவிடப்படாமல் தொழிற்பயிற்சி கற்கை நெறிகளை கற்க முடியும்.
ஏற்கனவே 2017ஆம் அண்டுக்கான வரவு செலவு முன்மொழிவில் இவ்விடயம் தொடர்பில் உள்ளடக்கபட்டுள்ளதாக சுட்டிகாட்டியுள்ள அமைச்சர், வரவு செலவில் உள்ளடக்கப்பட்டாலும் இல்லாவிடினும் ஜனவரி தொடக்கம் இலவசமாக கற்கை நெறிகளை தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அஹங்கம பிரதேசத்தில் 162 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள சுற்றுலா ஹோட்டல் பயிற்சி பாடசாலைக்கான அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்துகொண்டே அமைச்சர் இதனை தெரிவித்தார்.