தேசிய பாடசாலைகளில் வருடாந்த ஆசிரிய இடமாற்றத்தை இந்த வருடத்திற்குள் நடைமுறைப்படுத்த உள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
தேசிய கொள்கைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கடந்த காலங்களில் முறையான ஆசிரியர் இடமாற்ற கொள்கையொன்று இருக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
தேசிய பாடசாலைகளில் பத்து வருடங்களுக்கு மேலாக சுமார் 10 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். அவர்களை இடமாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளுக்கு இடையில் ஆசிரியர்களை இடமாற்றிக் கொள்வதற்காக தான் முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு மாகாண சபைகளின் இணக்கம் கிடைக்கப் பெறவில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ரோஹினி குமாரி விஜேரத்ன நேற்று பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
நன்றி- news.lk