தேசிய தொழிலாளர் சட்டத்துறை மாநாடு கொழும்பில்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய தொழிலாளர் சட்டத்துறை மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு அரச நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் நீதித்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் கொழும்பில் இடம்பெற்றது.

கொழும்பில் உள்ள பிரபல விருந்தகம் ஒன்றில் 26ஆம் திகதி ஆரம்பமானது. அத்துடன், 27ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது.

சட்டத்தரணிகள், அரச மற்றும் தனியார் துறை அதிகாரிகள், நீதித்துறை அதிகாரிகள், சிவில் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள், வர்த்;தகர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகளும் இதில் பங்கேற்றக உள்ளனர்.

மனித உரிமைகள், தொழிலாளர் சட்டம், உலக பொருளாதாரத்தின் போக்குகள், உள்நாட்டு மற்றும் சர்வதேச தொழிலாளர் சட்டங்களின் நிலைமை என்பன தொடர்பில் இந்த மாநாட்டில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

ஆரம்ப நிகழ்வில் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய உட்பட சட்டத்தரணிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆகியோரும் பங்கேற்றனர்.

வேலைத்தளம்

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435