தேசிய பாடசாலைகளில் அபிவிருத்தி உதவியாளர்களாக பணியாற்றிவர்களை 592 பேரை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளன என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
2013, 2018ம் ஆண்டுகளில் அரசாங்க வேலைத்திட்டங்களில் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டங்களின் கீழ் இணைத்துக்கொள்ளப்பட்டவர்களே இவ்வாறு அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
கல்வியமைச்சினால்அபிவிருத்தி உதவியாளர்களாக தேசிய பாடசாலைகளில் இணைக்கப்பட்டுள்ள இப்பட்டதாரிகள் விரும்பினால் ஆசிரியர் சேவையில் இணைந்துக்கொள்ளாம் என்றநோக்கில் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. வடக்கு, கிழக்கு, மலையகம் என நாட்டின் அனைத்துப்பாகங்களில் தேசிய பாடசாலைகளில் இணைக்கப்பட்டிருந்த இப்பட்டதாரிகள் அவர்களுடைய பட்டப்படிப்பிற்கேற்ப ஆசிரியர் சேவைக்கு விண்ணப்பித்தற்கு அமைவாக நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவர்களுக்கான நியமனங்கள் கடந்த வாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அலரிமாளிகையில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.