தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கு நிலுவை சம்பளம் எப்போது கிடைக்கும்?

​தேசிய பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான சம்பள நிலுவைத் தொகையை விரைவில் வழங்குமாறு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பள மீளமைப்புடன் சம்பள நிலுவைத் தொகையும் பதவி உயர்வுகளும் மாகாண பாடசாலை ஆசிரியர்களுக்கு கடந்த 2016ம் ஆண்டே வழங்கப்பட்டுள்ள நிலையில் தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாடசாலை ஆசிரியர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

தேசிய பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான 2017ம் ஆண்டுக்கான பதவியுயர்வுக் கடிதங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஆனால் இதுவரை சம்பள நிலுவைத் தொகை கிடைக்கவில்லை. தற்போதைய பொருளாதார சூழலில் தேசிய பாடசாலை ஆசிரியர்களின் நிலுவைச் சம்பளத்தை வழங்குவதில் இழுத்தடிப்பு செய்வது நியாயமற்ற செயல். உரிய அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435