தேசிய பாடசாலைகளில் 3 வருடங்களை பூர்த்தி செய்த ஆசிரியர்கள் தமது பிள்ளைகளை அப்பாடசாலையில் சேர்த்துக்கொள்வதற்கு வாய்ப்பு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு என கல்வியமைச்சர் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஆசிரியர் சேவையிலுள்ளவர்கள் தாம் கற்பிக்கும் பாடசாலைகளில் தமது பிள்ளைகளை பிரச்சினையின்ற இணைத்துக்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பததே இதன் நோக்கம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆரோக்கியமான மனநிலையுடன் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட ஆசிரியர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் இதனூடாக வலுப்பெற்ற ஆசிரியர்கள் சிறந்த சேவையை வழங்குவர் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.