தேசிய பாடசாலை ஆசிரியர் மூவாயிரம் பேருக்கு இடமாற்றம்

பத்து வருடங்களுக்கு மேலாக ஒரே தேசிய பாடசாலையில் பணியாற்றி வரும் 12,000 ஆசிரியர்களில் 3,000 பேரை இடமாற்றம் செய்ய கல்வியமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கடந்த பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றத்தை உடனடியாக செயற்படுத்துமாறு கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் வழங்கிய ஆலோசனைக்கமைவாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன் அதில் தரம் ஒன்று தொடக்கம் 11 வரை கற்பிக்கும் 9,000 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளது.

இவ்வாறு ஆசிரியர்களுக்கு மாற்றல் வழங்கப்படும் போது சில கஷ்டப்பிரதேசங்களில் தேசிய பாடசாலைக்கு அருகாமை மற்றொரு தேசிய பாடசாலை இல்லாமையினால் மாகாணசபையுடன் இணைந்து குறித்த ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது 353 தேசிய பாடசாலைகளில் கற்பிக்கும் 37000 வரையான ஆசிரியர்கள் கற்பிக்கும் அதே நேரம் அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர், அதாவது 12,000 ​பேர் பத்து வருடங்களுக்கு மேலாக இடமாற்றம் பெறவில்லை.

ஒழுக்கமான முறையில் இடமாற்ற குழு அமைக்கப்பட்டு ஆசிரியர் சங்கத்துடன் இணைந்து இடமாற்றத்தை பெற்றுக்கொடுக்குமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435