தேசிய பாடசாலை உயர்தர பிரிவுகளுக்கு 1400 ஆசிரியர்கள் தேவை

தேசிய பாடசாலைகளில் நிலவும் 1400 ஆசிரியர் வெற்றிடங்களை அடுத்த மாத இறுதிக்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் ஹேமந்த பிரேமதிலக்க தெரிவித்துள்ளார்.

க.பொ.த உயர்தரத்தர பாடத்திட்டங்களான விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் விவசாயத்துறை என்பவற்றில் மேற்படி வெற்றிடங்கள் காணப்படுவதாக மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மொழிமூல கற்கையில் இவ்வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் அடுத்தமாத இறுதிக்குள் இவ்வெற்றிடங்களுக்கு ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலதிக செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்கான போட்டிப்பரீட்சை ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நேர்முகத்தேர்வு நடைபெற்று வருவதாகவும் நாடு முழுவதும் உள்ள தேசிய பாடசாலைகளில் நிலவும் பட்டதாரி ஆசிரியர் வெற்றிடங்களை அடுத்த மாத இறுதிக்குள் நிரப்ப தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435