தேசிய மட்ட விளையாட்டு வீரர்களுக்கு நிரந்தர தொழில்வாய்ப்பு

தேசிய மட்டத்தில் உள்ள அனைத்து விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கும் அரச அல்லது தனியார் நிறுவனங்களில் நிரந்தர வேலைவாய்ப்பை வழங்க தாம் எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர தெரிவித்துள்ளார்.


தேசிய ரீதியில் பெயர் பெற்ற பல விளையாட்டு வீர வீராங்கனைகள் பல்வேறு பொருளாதார சிக்கல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றமையினால் தாம் இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளவுள்ள எதிர்காலத்திட்டங்கள் மற்றும் தற்போது முன்னெடுக்கும் திட்டங்களின் அபிவிருத்தி தொடர்பிலும் ஊடகவியலாளர்களை தௌிவுபடுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான விளையாட்டு அகடமி ஒன்றை நிறுவப்படவுள்ளதுடன் விளையாட்டு கல்வியியற்கல்லூரி, தியகம விளையாட்டு கட்டிடத்தொகுதி மற்றும் நுவரெலிய விளையாட்டுப் பயிற்சி கட்டிடத் தொகுதி ஒருங்கிணைப்பு என்பவற்றினூடாக, சர்வதேச பல்கலைக்கழத்துடன் தொடர்புபட்ட பட்டப்படிப்பை பெற்றுக்கொள்வதற்காக அவுஸ்திரேலியா கன்பரா பல்கலைக்கழகத்துடன் தொடர்புகொண்டு செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435