தொடருந்து தொழிற்சங்கத்தினர் இன்று நள்ளிரவு முதல் முன்னெடுக்கத் திட்டமிட்டிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று பிற்பகல் 2.00 மணிவரை பிற்போடப்பட்டுள்ளது.
நிதி அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தித் தருவதாக வழங்கப்பட்ட உறுதி மொழியயை அடுத்து, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொடருந்து தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
வேதன முரண்பாடு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அமைச்சரவை கிடைத்துள்ள போதும், அதனை நிதியமைச்சு நடைமுறைப்படுத்தாமைக்கு எதிராக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
தொடருந்து சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நிலைய அதிபர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கள் நேற்று நள்ளிரவு முதல் இரண்டு நாட்களுக்கு அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க இருந்தனர்.
இந்த நிலையில், குறித்த போராட்டத்தை இன்று பிற்பகல் 2.00 மணிவரை பிற்போட்டுள்ளதாக, கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்.