தொண்டர் ஆசிரியர் பிரச்சினைக்கு தீர்வு

வடக்கில் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றுவோர் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு 2013 டிசம்பர் 31 வரை தொண்டர் மற்றும் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களாக பணியாற்றியவர்களையும் உள்வாங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் கேள்வி ​நேரத்தின் போது எழுப்பப்பட்ட வினாவிற்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தெரிவிக்கையில், அடிப்படை தகைமை இல்லாதவர்களுக்கு சலுகை வழங்கி எந்த தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களாக பணியாற்றிவர்களை ஆசிரியர் சேவையில் இணைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. 2009 தொடக்கம் தொடர்ச்சியாக 9 வருடங்கள் பணியாற்றியோருக்கு அவ்வாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டது. வேறு சேவைகளில் இருந்தவாறு பணிபுரிந்தோரை அந்தந்த சேவைக்கு விடுவிக்கமும் தீர்மானிக்கப்பட்டது. 167 தொண்டர் ஆசிரியர்கள் அவ்வாறே தெரிவானார்கள்.

இனவாத அடிப்படையில் செயலாற்ற யாருக்கும் இடமளிக்க முடியாது. அவ்வாறு அநீதி ஏற்பட்டிருந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435