பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டால் முறையிடுங்கள்

​தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்தல் தொடர்பாக முறையீடு செய்வதற்கான துரித கதி அழைப்பு தொலைபேசிய சேவையை TISL அறிமுகம் செய்துள்ளது. முறைப்பாடானது 076 3223662 மற்றும் 076 3223448 அல்லது [email protected] என்ற மின்னஞ்சலுக்கு மின்னஞ்சல் செய்ய முடியும்.

பொதுச் சொத்துக்களை பாதுகாத்தல் (Programme Protection for Public Resource) தொடர்பான செயற்றிட்டமானது கடந்த 2006ம் ஆண்டு தொடக்கம் தேர்தல் கண்காணிப்பு செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது. இதன் வேலை குறிப்பாக பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் பற்றியமாகும். 2019 தேர்தலுக்கு அப்பால் 25 மாவட்டங்களுக்கும் தனித்தனியாக கண்காணிப்பாளர்களும் தேர்தல்கள் கண்காணிப்பாளர்களும் 180 பேரும் இத்தேர்தல் கண்காணிப்புகளில் ஈடுபடுகின்றனர்.

TISL சகல வேட்பாளர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் பொது அவலுவலர்களையும் தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகக்கும் ஏற்ப செயற்படுமாறு வேண்டுகிறது. குறிப்பாக 2141/52 எனும் விசேட வர்த்மானி அறிவித்தலிலுள்ள விதிகள் பற்றி மேலதிக அவதானம் செலுத்தப்பட வேண்டும். அதன் படி அரச உத்தியோகத்தர்களது நடவடிக்கைகளுக்காக அரசுக்குச் சொந்தமான வாகனங்களை பாவித்தல், விசேட பொது நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல் என்பன இதில் அடங்கும்.

TISL நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக்க ஒபேசேக்கர தெரிவிக்கையில், சகல உள்ளுராட்சி மன்றங்கள் தொடக்கம் அரச முதலீட்டு கூட்டுத்தாபனங்கள் வரையிலான சகல அரச ஊழியர்களும் தேர்தல் சட்டத்தை மீறானல் ஏற்படும் தண்டனைகள் தொடர்பாக அறிந்திருப்பது மிகவும் அவசியமாகும் என தெரிவித்தார். தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட சட்டதிட்டங்களுக்கு அமைவாக செயற்படாத பட்சத்தில் அரசியலமப்பின் உறுப்புரை 104 GG இன் பிரகாரம் மூன்று வருடங்கள் வரை சிறைத்தண்டணை விதிக்கக்கூடிய குற்றமாகும்.

கடந்த காலங்களில் சிரேஷ்ட அரச அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் குற்றம்சாட்டப்படுவதற்கும் காரணமாய் அமைந்திருந்தது. ஆகையால், தேர்தல் காலங்களின் போது பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யும் சம்பவங்கள் குறித்து அரச அலுவலர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் தடுக்க இந்த எடுத்துக்காட்டுகள் உதவும் என்று நாம் நம்புவதோடு அரசியல் தலையீட்டிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அரச ஊழியர்களுக்கு இவை உதவும் என்றும் அவர் தெரித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435