தொழில்நுட்பம்சார் பாடங்களைக் கற்பிப்பதற்காக 2200 பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்காகவே பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
கல்வியமைச்சு அறிமுகப்படுத்தப்படவுள்ள 13 வருட உத்தரவாக கல்வித் திட்டத்தின் கீழ், தகைமையடைய பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
திறந்த போட்டிப்பரீட்சையினூடாக தெரிவு செய்யப்படும் பட்டதாரிகள் இலங்கை ஆசிரியர் சேவையின் 31 (அ) தரத்தில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என்று கல்வியமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கடந்த நவம்பர் மாதம் 10ம் திகதி வௌியிடப்பட்டது. போட்டிப்பரீட்சைக்கான விண்ணப்பங்களை இம்மாதம் (டிசம்பர்) 11ம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு கல்வியமைச்சின் செயலாளர் கோரியுள்ளார்.
குழந்தை உளவியல், பராமரிப்பு சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு அரங்கற்கலை மற்றும் கைவினை, நவநாகரீக வடிவமைப்பு, உணவு பதப்படுத்தல் கல்வி, ஜவுளி மற்றும் ஆடைக்கல்வி உள்ளிட்ட 26 வகைத் தொழிற்கல்விக்கான பட்டம் பெற்ற பட்டதாரிகளே இதனூடாக தெரிவுசெய்யப்படவுள்ளனர். தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலம் போட்டிப்பரீட்சைகள் நடத்தப்படவுள்ளன.