தொழிற்சங்கங்களின் சந்தாப்பணத்திற்கு இனி ஆப்பு!

சம்பள உயர்வு விடயத்தில் தொழிற்சங்கங்கள் பொறுப்பின்றி நடந்து கொண்டுள்ளமையினால் இனி சந்தாப்பணம் கொடுக்கப்போவதில்லை என்று தோட்டத் தொழிலாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

அதற்கமைய கட்சி பேதமின்றி ஒன்றிணைந்துள்ள அக்கரபத்தனை கிரன்லி கீழ்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த சுமார் 200 தொழிலாளர்கள் சந்தாப்பணம் கழிப்பதை இம்மாதம் தொடக்கம் நிறுத்துமாறு கோரி தனித்தனியே ஒப்பமிடப்பட்ட கடிதங்களை தோட்ட அதிகாரியிடம் கையளித்துள்ளனர்.

சம்பளத்தில் 50 ரூபாவை மட்டுமே உயர்த்த கையெழுத்திட்ட தொழிற்சங்கங்கள் 18 மாத நிலுவை சம்பளத்தையாவது பெற்றுகொடுக்க ஆவன செய்ய வேண்டும் என்று அத்தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மக்களை துன்புறுத்திய நரகாசுரன் என்ற அரக்கனை கொன்றொழித்த தினமே தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. அதுபோல் இம்முறை தொழிற்சங்கங்கள் என்ற பெயரில் எம்மை அழித்து வந்த தொழிற்சங்கவாதிகள் என்ற நரகாசுரன்களை மனதில் இருந்து அழித்தொழிக்கும் வகையிலேயே இம்முறை தீபாவளி கொண்டாடப்படுவதாகவும் அம்மக்கள் சுட்டிக்காட்டினர்.

இதேவேளை நேற்று (19) தேயிலை நிறுக்கும் மடுவத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்த அம்மக்கள் சம்பள உயர்வாக வழங்கப்பட்டுள்ள 50 ரூபா எமது கட்ட மொய்யா? (இறந்த பின்னர் சடலத்திற்கு இறுதியாக வழங்கும் காணிக்கை) என்றும் நாம் மாதாந்தம் 150 ரூபா கட்ட மொய்யை தொழிற்சங்கங்களுக்கு கொடுத்து வருகிறோம் என்று கூறி தமது கடுமையாக மன அங்கலாய்ப்பை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள் (1)

  1. uma says:

    சிறந்த தீர்மானம்.இதை தொடர்ந்து செய்யவும்.எதையும் செய்யாத தொழில் சங்கங்களுக்கு எதுக்கு சந்தா?

    (0)(0)

Leave a Reply to uma

Cencel

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435