தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் அதிபர் ஆசிரியர் சங்கங்கள்

ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கள் ஒன்றிணைந்து மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையொன்றை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாயர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

சம்பள முரண்பாட்டை நீக்குதல், இடைக்கால கொடுப்பனவு வழங்குதல் உட்பட 6 கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 16ம் திகதி தொடக்கம் 3 நாட்கள் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக நேற்று (09) கொழும்பில் சி.எம்.யு அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக 5 நாட்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை மேற்கொள்ள தாம் தீர்மானித்திருந்ததாகவும் 19ம் திகதி பொதுத்தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான இறுதித் திகதி என்பதனால் அன்றைய தினம் அரச விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையினால் தமது தொழிற்சங்க நடவடிக்கை மூன்று நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்போராட்டத்திற்கு 30 அதிபர் ஆசிரியர் சங்கங்கள் ஒத்துழைப்பு வழங்குகின்றன.

இதேகோரிக்கைகளை முன்வைத்து கடந்த 14ம் திகதி ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக போராட்டம் நடத்தப்பட்டதுடன் 26ம் திகதி சுகயீன லீவு போராட்டமொன்றையும் மேற்கொள்ளப்பட்டது. எனினும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் இவ்விடயத்தில் அமைதியுடனேயே இருக்கிறது. எனவே எமது உரிமையை வென்றெடுக்க ஏற்கனவே திட்டமிட்டது போன்று வேலைநிறுத்தப்போராட்டம் மேற்கொள்ளப்படும்.

இத்தொழிற்சங்க நடவடிக்கையின் காரணமாக ஏற்படும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க அனைத்து தொழிற்சங்கங்களின் தலைவர்களும் தயார்நிலையில் உள்ளனர். எனவே போலியான பிரசாரங்களுக்கு ஏமாறாமல் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்து ஆசிரியர் அதிபர்களிடம் கோருகிறோம் என்றும் மஹிந்த ஜயசிங்க மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435