தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடப்போவதில்லை- ரயில் சாரதிகள் சங்கம்

அவசரகால சட்டத்தின் கீழ் தொடருந்து சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனப்படுத்தியபோதும் தமது தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடப்போவதில்லை என்று ரயில் சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.

சனநாயக நாட்டில் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்வது தமது உரிமை என்று கூறியுள்ள தொடருந்து சேவை அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர், இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறு இருக்க ரயில் சேவை அத்தியவசிய சேவையாக பிரகடனப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் இன்று (27) காலை வௌியாகியுள்ளது. இனி அத்தியவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேலைநிறுத்தம் செய்யப்படுமாயின் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முடியும் என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவை இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஓய்வு பெற்ற தொடருந்து சாரதிகள், கட்டளையதிகாரிகள், சமிக்ஞை பரிசோதகர்கள், வீதி பரிசோதகர்கள் போன்றோரை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை நாளை (28) காலை 9.00 மணிக்கு நாராஹேண்பிட்ட சாலிக்கா மண்டபத்தில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் கருத்து தெரிவித்த தொடங்கொட, ஓய்வு பெற்றவர்களை சேவையில் இணைத்துக்கொள்வதாயின் அவர்களின் உடல்நிலை, பார்வை என்பவை தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

ரயில் சேவையை பாதுகாப்பற்ற சேவையாக மாற்றும் வகையில் அமைச்சர் செயற்படுகிறார் என்று சுட்டிக்காட்டியுள்ள தொடங்கொட, எதிர்காலத்தில் விபத்துக்கள் ஏற்படின் அப்பொறுப்பையும் அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.

அமைச்சரரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ள போதும், தங்களது வேதனப்பிரச்சினையைத் தீர்க்க நிதி அமைச்சு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாராந்தம் ரயில் பணியாளர்கள் போராட்டத்தை நடத்துவோம்.

எவ்வாறு இருப்பினும் தொழிற்சங்க நடவடிக்கையை கவனத்திற்கொள்ளாது சேவைக்கு சமூகமளிக்கும் எவறையும் தாம் தடுக்கப்போவதில்லை என்றும் தமது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும் வரைய தொடர்ச்சியாக தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் இந்திக்க தொடங்கொட சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 21ம் திகதி முதல் ரயில்வே பணியாளர்கள் 48 மணிநேர தொழிற்சங்க போராட்டத்தை நடத்தி இருந்தனர்.

இதன்போது போக்குவரத்து அமைச்சு மற்றும் நிதி அமைச்சுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்திய போதும் அது தோல்வி அடைந்தது.

இந்தநிலையி;ல இன்று நள்ளிரவு ஆரம்பிக்கப்படும் போராட்டம் நாளை நள்ளிரவு வரையில் தொடரும் என்று, தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட முன்னதாக தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி செயலாளர் உதய ஆர். செனவிரத்னவின் கையொப்பத்துடன் 1979 இலக்கம் 61 என்ற அத்தியாவசிய சேவை சட்டத்தின் இரண்டாவது சரத்தின் பிரகாரம் தொடருந்து சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435