நேற்று நள்ளிரவு ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை வெற்றியடைந்துள்ளதாக ரயில்வே தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்ணாண்டோ ரயில்வே தொழிற்சங்க ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்தையொன்றையும் நடத்தியுள்ளார்.
இன்று (08) காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் இதுவரையில் தகவல்கள் வௌியாகவில்லை.
எவ்வாறிருப்பினும் அனைத்து ரயில்வே தொழிற்சங்க பிரதிநிதிகளையும் பேச்சுவார்தைக்கு வருமாறு போக்குவரத்து அமைச்சு அழைப்பு விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்றும் (07) உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோதும் சாதகமான இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வரும் நிலையில் புகையிரத சீசன் டிக்கட்டுக்களை பயன்படுத்தி இலங்கை போக்குவரத்துசபை பஸ்களில் பயணிக்கலாம் என்று போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.