தொழிலற்ற கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு மீண்டும் வாய்ப்பு

கிழக்கு மாகாணத்தில் கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடநெறிகளுக்கு நிலவும் வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்டிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கிழக்கு மாகாண பட்டதாரிகள் மற்றும் உயர் தேசிய கல்வியியற் கல்லூரி டிப்ளோமாதாரிகளையும் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கும் ஆசிரியர்களை நியமிப்பதற்கான நேர்முகப்பரீட்சை மிக விரைவில் நடைபெறும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் சுமார் ஐந்தாயிரத்து 21 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. அவ்வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் கிழக்கு முதலமைச்சர் பிரதமருடன் கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொண்டிருந்தார்.

இதேவேளை, கடந்த வாரம் திருகோணமலையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி ஆசிரியர் பற்றாக்குறை மட்டுமன்றி ஏனைய குறைப்பாடுகளையும் நிவர்த்தி செய்வதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435