தொழிலாளர்களுக்கு ஏமாற்றம்: 700ரூபா ரூபாவுடன் கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திட இணக்கம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான அடிப்படை நாளாந்த வேதனத்தை 700 ரூபாவாக அதிகரிப்பதற்கு பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் வெளியிட்டுள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் , முதலாளிமார் சம்மேளனம், தொழில் அமைச்சு மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கிடையே இன்று கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

விலைக்கான கொடுப்பனவாக 50 ரூபாவும்

ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி என்பனவற்றை உள்ளடக்கி 105 ரூபாவும்

மேலதிக கொளுந்து கிலோ ஒன்றுக்காக 40 ரூபாவும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டு ஒப்பந்தத்தை எதிர்வரும் 28 ஆம் திகதி திங்கட்கிழமை கைச்சாத்திடப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா அடிப்படை வேதனம் வழங்கப்பட வேண்டும் என பெருந்தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

அவர்களுக்கு ஆதரவாக தன்னெழுச்சியான இளைஞர் அமைப்புகளும் போராடியதுடன், வடக்கு, கிழக்கு கொழும்பு என் நாட்டின் அனைத்து பாகங்களிலும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிலையில், தொழிலாளர்களுக்கு 1000 ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என கூட்டு ஒப்பந்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியாக தெரிவித்து வந்தன.

இந்த நிலையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏமாற்றமளிக்கும் வகையில் 700 ருபா என்ற அடிப்படை வேதனத்தை வழங்க தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435