தொழிலாளர்களை நசுக்க நினைக்கிறதா அரசாங்கம்?

தனியார்துறையில் பணியாற்றுவோருக்கான 8 மணிநேர வேலைநேரத்தை ரத்து செய்ய அரசாங்கம் முயற்சிப்பதாக தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தின் ஒழுங்கமைப்புச் செயலாளர் துமிந்த நாகமுவ குற்றஞ்சாட்டியுள்ளார்.

எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கையுமின்றி தனியார்துறையில் பணியாற்றும் ஊழியர்களை நீக்கவும் ஊழியர் சேமலாப நிதியத்தை தனியார்துறைக்கு வழங்கவும் அரசாங்கம் சட்டங்களை உருவாக்கி வருகிறது.

தொழிலாளர்களின் உரிமைகளை நோக்காது, ஊழியர்கள் தொடர்பில் தன்னிச்சையான தீர்மானங்களை தொழில் வழங்குநர்களுக்கு அதிகாரத்தை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளை தோல்வியடைற செய்தல் வேண்டும்.

‘தேர்தல் போராட்டத்தில் தொழிலாளர் உரிமைகளை புதைப்பதற்கு இடமளியோம்’ என்ற தொனிப்பொருளில் தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம் முன்னெடுத்த போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மருதானை எல்பினிஸ்டன் அரங்கின் அருகில் ஆரம்பமாகி கொழும்பு கோட்டை ரயில் நிலையம் வரையில் பவனி சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் தொழிலாளரை நசுக்கும் அரசின் சூழ்ச்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்

இப்போராட்டத்தில் இடதுசாரி கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435