
தொழிற்சாலை கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் வேலைவழங்குனர் வேலையிடத்தில் வேலை செய்பவர்களின் சுகாதார பாதுகாப்பு நலனோம்பலை உறுதிப்படுத்துவது கட்டாயமானதாகும்.
நிறுவனமானது வளாகத்தின் தரம், சுத்தம், இடநெருக்கடி, நியாயமான வெப்பநிலையைப் பேணுதல், காற்றோட்டம், வெளிச்சம், தளத்தின் நீர்வடிகால் அமைப்பு, சுகாதார செளகரியங்கள் என்பனவற்றை கண்காணிக்க வேண்டும்.
பணியாளரின் பாதுகாப்பானது இயந்திரங்கள், பொறித்தொகுதிகள், மாற்றி அனுப்பும் உபகரணங்கள், கருவிகள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை ஆக உயர்ந்தபட்ச பாதுகாப்பு நிபந்தனைகளில் பொருத்தி பேணுவது மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். உபகரணங்கள், கருவிகள், இயந்திரங்கள், உற்பத்திகளாவன பணியாளர்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தும் உரிய முறையில் ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.
ஒரு நிறுவனத்தின் பாதுகாப்பு நிலைமைகளானவை இடரில் விழுதல் தொடர்பாகவும் அசையும் பாரமான பொருட்கள், அபாயகரமான இயந்திரங்கள், கருவித்தொகுதிகளில் இருந்து பாதுகாக்கப்படுதல் என்பன தொடர்பாக கண்காணிக்கப்படுவதுடன் மட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வேலை செய்வதற்காக தடுப்பு ஏற்பாடுகள் எடுக்கப்பட வேண்டுமென்பதுடன் மட்டுப்படுத்தப்பட்ட இடங்களில் வேலை செய்வதற்காக தடுப்பு ஏற்பாடுகள் எடுக்கப்பட வேண்டும்; திரவங்கள் கொட்டுப்படும், தீ தடுப்பு, இடர்கள் தொடர்பாகவும் கவனம் எடுக்கப்பட வேண்டும்.
தொழிற்சாலைகள் கட்டளைச்சட்டமானது மேலும் வேலைவழங்குனர்கள் வேலைக்கு ஈடுபடுத்தப்பட்ட ஆட்களை தூசு புகை மற்றும் ஏனைய அசுத்தங்களை சுவாசிப்பதில் இருந்து பாதுகாப்பதற்கான நடைமுறை ரீதியான எல்லா ஏற்பாடுகளையும் வைத்திருக்கும்படி விசேடமாக கோரும் ஏற்பாடுகளை உள்ளடக்குகிறது. மேலும் உள்ளக எரிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கான விசேடித்த நிபந்தனைகளாகிய இயந்திரத்தில் இருந்து வெளியேறும் வாயுக்களை திறந்த வெளிக்கு அனுப்புவதற்கான தேவை என்பன அவ் இயந்திரத்தை கவனித்துக்கொண்டிருப்போர் தவிர்ந்த ஏனையோருக்கு அதிலிருந்தான புகைகள் மாற்றப்படாதிருப்பதற்காக அவ்வறைகளை தனியாக்கி பிரித்தல் போன்றன சுட்டிக்காட்டப்படுகின்றன.
மூலம் : 1942 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் 6.-6 பிரிவுகள்
இலவச பாதுகாப்பு
1942 ஆம் ஆண்டு தொழிற்சாலை கட்டளைச் சட்டத்தின் விசேடித்த ஏற்பாடுகளாவன வேலைவழங்குனர் சுவாசிக்கும் உபகரணங்கள், கண்பாதுகாப்பு கண்ணாடிகள், வெளியேற்றும் உபகரணங்கள்) ஈரமான தீங்கு ஏற்படுத்தும் பதார்த்தங்களுடன் தொடர்புபடும் வேலை செய்யும் பணியாளர்களுக்கு இலவசமான இவ்வாறான பாதுகாப்பை வழங்குவதை வேண்டி நிற்கிறது.
மூலம்: 1942 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் கட்டளைச் சட்டம் : §32, 51, 53 & 58
பயிற்சி
தொழிற்சாலைகள் கட்டளைச் சட்டம் ஆனது 18 வயதிற்கு குறைவான எந்த இளம் பணியாளரும் இயந்திரங்களில் அவர் அவ்வியந்திரத்தை இயக்குவதுடன் சம்பந்தப்பட்ட அபாயங்கள் குறித்து முழுமையாக அறிவுறுத்தப்பட்டாலன்றி, அது தொடர்பான போதிய பயிற்சியைப் பெற்றுக்கொண்டாலன்றி மற்றும் அனுபவமான அறிவு நிறைந்த பணியாளரின் மேற்பார்வையில் வேலை செய்தாலன்றி அவ்வாறன இயந்திரங்களில் வேலை செய்ய அனுமதிக்கப்படக்கூடாது என வேண்டி நிற்கிறது.
மூலம்: 1942 தொழிற்சாலை கட்டளைச் சட்டம் §26
தொழிலாளர் மேற்பார்வை முறைமை
தொழிலாளர் பரிட்சிப்பு முறைமையானது C081 ஏற்பாடுகளுடன் உடன்பாடானதாக காணப்படுகிறது. ஏனெனில் இலங்கையானது தொழிலாளர் பரிட்சிப்பு முறை பிரயோகத்தை அமுல் செய்த முதலாவது தென்னாசிய நாடாக மாறியுள்ளது. இம் முறைமையானது நாட்டிலுள்ள 56 தொழில் திணைக்கள அலுவலகங்களின் தொழில் நிர்வாக நிறுவனங்களை சிறந்த முறையில் நிர்வகிப்பு செய்வதற்கு தொழில் அமைச்சு அனுமதிக்கிறது. தொழில் திணைக்களத்தின் கீழ் இயங்கும் கைத்தொழில் பாதுகாப்பு பிரிவானது வேலையிடங்களில் தொழிலாளர்களின் நலனோம்பல், சுகாதாரம், பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்துவதற்காக தொழிற்சாலைகளைப் பதிவு செய்வதுடன் ஒழுங்கு கிரமமான பரிசோதிப்புக்களையும் நடாத்துகிறது. தொழில் பரிசோதிப்பு முறைமையானது தொழிற்சாலைகள் சட்டத்தின் பல்வேறுபட்ட பாகங்களின் கீழ் வழங்கப்படுகிறது.
இந்த பரிசோதிப்பானது வேலையிடங்களில் நுழைவதற்கும் விசாரணைகளுக்காக மாதிரிகளை எடுத்துக்கொள்வதற்கும் இடம்பெறும் விபத்துக்கள் அபாயகரமான அல்லது சம்பவங்கள் மீதான விசாரணைகளை மேற்கொள்வதற்கும் இடரை இல்லாதொழித்தல் அல்லது பொருத்தமான மட்டத்திற்கு குறைத்தல் என்பவற்றுக்கு செய்யப்படும் வரைக்கும் முன்னேற்றுவதற்கு அல்லது தடைசெய்வதற்கான அறிவித்தல்களை வழங்குவதற்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது.