
தொழிலாளர் சட்டத்தை மீறிய 400 புலம்பெயர் தொழிலாளர்களை நாடு கடத்த ஓமான் மனித வள அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தொழிலாளர் சட்டத்தை மீறிய 1268இற்கும் மேற்பட்டோர் அடையாளங்கண்டுள்ள போதிலும் அவர்களில் 471பேர் கடந்த வாரம் நாடு கடத்தப்பட்டனர்.
நாளுக்கு நாள் சட்டவிரோதமாக அந்நாட்டில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனாலும் அவர்கள் நாட்டினுல் மேற்கொள்ளும் மோசமான செயற்பாடுகளை கட்டுப்படுத்த இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
நாடு கடத்தப்பட்டவர்களில் சுமார் 396பேர் தொழிலாளர் சட்டங்களை மீறியுள்ளதுடன் மிகுதியானவர்கள் போக்குவரத்து விதிகள், சட்டவிரோத செயற்பாடுகள் என்பவற்றுடன் தொடர்புபட்டவர்களாவர்.
இவர்களில் 120 பேர் மஸ்கட் நகரிலும் 71பேர் பெட்னா நகரிலும் சட்டவிரோதமாக பணியாற்றியவர்கள் ஆவர்.